Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: 13ம் தேதி சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்! டிக்கெட் விற்பனை விறுவிறு!

Sale of IPL tickets commence for 2nd Chennai Match
சென்னை: நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் வரும் 13-ந் தேதியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

ஐ.பி.எல். 6வது தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெறுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டன.

சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 13-ந் தேதி 2-வது போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது.

இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.750 (ஏ.பி மற்றும் சி கீழ்பகுதி) ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.10 ஆயிரம் (டி பாக்ஸ் குளிர்சாதன வசதி) ஆகும். ரூ.1,200 (டி.இ. மற்றும் எப். ஸ்டாண்டு மேல் பகுதி), ரூ.1,500 (ஏ,பி மற்றும் சி ஸ்டான்டு மேல்பகுதி). ரூ.2,500 (டி3. எம்.சி..சி.), ரூ.5 ஆயிரம் (பெவிலியன் டெரஸ் மற்றும் எப் கீழ்பகுதி (குளிர்சாதன வசதி), ரூ. 6 ஆயிரம் (ஏ.பி. மற்றும் சி. பாக்ஸ், குளிர்சாதன வசதி), ரூ.7 ஆயிரம் (அண்ணா பெவிலியன் குளிர்சாதன வசதி) ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஐபிஎல் டிக்கெட்டை வாங்க ஏராளமானோர் அதிகாலையிலேயே மைதானத்துக்கு வருவது வழக்கம். ஆனால் இன்று குறைவான கூட்டமே இருந்தது.

Story first published: Thursday, April 4, 2013, 13:18 [IST]
Other articles published on Apr 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+