ஐபிஎல் முடிந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சின்
மும்பை: கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் 6வது சீசன் முடிந்த பிறகு ஓய்வு பெறுகிறார்.
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் விளையாட்டு இருக்கும் வரை சச்சினின் பெயரும் நிலைத்திருக்கும். அத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். அவரது பல சாதனைகளை முறியடிக்க இனி ஒருத்தர் பிறந்து தான் வர வேண்டும்.
டீன் ஏஜில் விளையாட வந்த சச்சினுக்கு தற்போது 39 வயது ஆகிறது. இந்நிலையில் அவர் தனது ஓய்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டிசம்பரில் ஓடிஐ-ல் இருந்து ஓய்வு
கடந்த டிசம்பர் மாதம் சச்சின் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

சாதனை மன்னன் சச்சின்
சச்சின் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சிலரும், அவர் விளையாடும் வரை விளையாடட்டும் என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.

ஐபிஎல் முடிந்த கையோடு ஓய்வு
சச்சின் எப்பொழுது ஓய்வு பெறுவார் என்று பலரும் விவாதித்து வரும் நிலையில் அவரே இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை மறுநாள் துவங்கும் ஐபிஎல் 6வது சீசன் முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் ஃபூல்
சும்மா ஏப்ரல் ஃபூல் செய்தோம்.


Click it and Unblock the Notifications