சண்டிகர்: சண்டிகரில் நாளை நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டியை டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா பார்க்க வரவுள்ளார்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி முதலாவது போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் நாளை சண்டிகரில் 2வது போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியைக் காண தனது குடும்பத்தினருடன் சானியா மிர்ஸா சண்டிகர் வருகிறார். சானியா தவிர மேலும் பல விளையாட்டுப் பிரபலங்களுக்குப் போட்டியைக் காண வருமாறு பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதாம்.
சானியா மிர்ஸா கிரிக்கெட் போட்டியைப் பார்க்க சண்டிகர் வருவதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.