Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குண்டுவெடிப்பு எதிரொலி- ஹைதரபாத்தில் 2-வது டெஸ்ட் போட்டி ரத்து?

Second Test may be shifted out of Hyderabad
சென்னை/ஹைதராபாத்: அடுத்தடுத்து குண்டுகள் வெடித்திருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா அணியுடனான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி முதலாவது டெஸ்ட் போட்டியை இன்று சென்னையில் விளையாடுகிறது. மார்ச் 2-ந் தேதி ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஹைதராபாத்தில் நேற்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த நிலையில் சென்னையில் தமது அணி வீரர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஆஸ்திரேலியா தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை போட்டியில் எந்த விதமான அச்சுறுத்தல் இல்லை என்பது ஆஸ்திரேலியாவுக்கு இந்திய தரப்பில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்று பயணத்தை ரத்து செய்வதை கைவிட்டுவிட்டு 2-வது டெஸ்ட் போட்டியை ஹைதராபாத்துக்குப் பதிலாக வேறு ஒரு நகரில் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Friday, February 22, 2013, 9:29 [IST]
Other articles published on Feb 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+