ஆண்டின் சிறந்த வீரராக ஷேவாக் தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரரை தேர்வு செய்து அவருக்கு பாலி உம்ரிகர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இன்று 2007-08ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
சிறந்த வீரராக அதிரடி துவக்க வீரர் ஷேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷேவாக் கடந்தாண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 56.23 ரன்கள் சேர்த்துள்ளார். சென்னை டெஸ்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 319 ரன்கள் எடுத்து அசத்தினார்.
சிறந்த உள்ளூர் வீரருக்கான விருதை செளராஷ்டிர வீரர் சதீஸ்வர் புஜாரா பெறவிருக்கிறார். அவர் உள்ளூர் போட்டிகளில் 807 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த உள்ளூர் பவுலர் விருதை உபி வீரர் சுதீப் தியாகி கைப்பற்றியுள்ளார். 41 விக்கெட் எடுத்ததற்காக் அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான குண்டப்பா விஸ்வநாத்துக்கு கிடைத்துள்ளது.
இவர்களை தவிர 2007ல் நடந்த டொன்டி-20 உலக கோப்பை தொடரில் கோப்பை வென்று தந்த கேப்டன் டோணி மற்றும் டெஸ்டில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்த ஹர்பஜன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.
வரும் 18ம் தேதி மும்பையில் நடக்கும் விழாவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:23 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications