முனாப் படேலுடன் மோதல்: பாதியில் விலகிய ஷேவாக்

வடோதராவில் கும்ப்ளே தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும், ஷேவாக் தலைமையிலான ரஞ்சி கோப்பை சாம்பியன் டெல்லி அணிக்கும் இடையே இராணிக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது.
நேற்று டெல்லி அணியில் ஆகாஷ் சோப்ராவும், ஷேவாக்கும் பேட் செய்து கொண்டிருந்தபோது, முனாப் படேலுக்கும், ஷேவாக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தன்னைப் பார்த்து தரக் குறைவான வார்த்தைய முனாப் படேல் பயன்படுத்தியதாக ஷேவாக் போட்டி நடுவர் ராஜேந்திர ஜடேஜாவிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நடுவர் தாராப்பூர், ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் கும்ப்ளேவுடன் விவாதித்தார். இன்று முனாப் படேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஷேவாக் டெல்லி கிளம்பிச் சென்று விட்டார்.
இதை பரோடா கிரிக்கெட் சங்க மீடியா மேனேஜர் ஜதீன் வக்கீல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், கிரிக்கெட் வாரியத்திற்கு ஷேவாக் - முனாப் படேல் விவகாரம் குறித்து தெரியாது. ஷேவாக் கிளம்பிச் சென்றது குறித்தும் தெரியாது என்றார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் தொடரின்போது வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் பளார் பளார் என அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஹர்பஜன் சிங். இதையடுத்து அவர் மீது கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் ஷேவாக்கை திட்டியதாக முனாப் படேல் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications