Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10,000 ரன்களை கடந்தார் திராவிட்- சச்சின் '0'!

Rahul Dravid
சென்னை: டெஸ்ட் போட்டிகளில் ராகுல் திராவிட் இன்று 10,000 ரன்களைக் கடந்தார்.

சென்னையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அவர் இந்த சாதனையைப் படைத்து 10,000 ரன்களை எடுத்த 6வது உலக வீரர் என்ற பெருமையை பெற்றார். கவாஸ்கர், டெண்டுகரை அடுத்து 10,000 ரன்கள் இந்திய வீரர் இவர் தான்.

முன்னதாக தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை புரட்டு புரட்டென்று புரட்டியெடுத்த வீரேந்திர ஷேவாக் இன்று அவுட் ஆனார். 304 பந்துகளில் 319 ரன்கள் எடுத்து ஷேவாக் ஆட்டமிழந்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிரா ஆவது உறுதியாகி விட்ட நிலையில் நேற்று வீரேந்திர ஷேவாக் அதிரடியாக ஆடி 309 ரன்களைக் குவித்து தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சிதறடித்தார்.

இந்திய மண்ணில் எடுக்கப்பட்ட முதல் முச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விளையாடி லாராவின் உலக சாதனையான 400 ரன்களை ஷேவாக் எட்டிப் பிடிப்பாரா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால் ஷேவாக் மேலும் 10 ரன்களை மட்டும் சேர்த்த நிலையில்
ஆட்டமிழந்தார்.

மொத்தம் 304 பந்துகளைச் சந்தித்த ஷேவாக் 43 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 319 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

சச்சினுக்கு முட்டை:

பேட்டிங் களமாக மாறி விட்ட சேப்பாக்கம் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடி ஒரு சதம் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வந்த வேகத்தில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

கங்குலி வந்த வேகத்தில் அதிரடியாக தொடங்கினார். 29 பந்துகளை சந்தித்த அவர் 24 ரன்கள் சேர்த்த நிலையில் பால் ஹாரிஸ் பந்தில் பெளச்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+