காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து ஷேவாக் நீக்கம்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடிய ஷேவாக் அதிக ரன்களைக் குவித்தார். இந்த நிலையில் ஒரு நாள் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் காயமடைந்தார். இதனால் முதல் போட்டியில் அவர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் போட்டித் தொடர் முழுவதிலும் நீக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் நாடு திரும்புகிறார். அவருக்குப் பதில் புதிய வீரர் யாரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே கை காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் பத்ரிநாத் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் முதல் போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நல்ல பார்மில் உள்ள ஷேவாக்கும் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஷேவாக் குறித்து கேப்டன் டோணி கூறுகையில், நல்ல பார்மில் இருக்கிறார் ஷேவாக். துரதிர்ஷ்டவசமாக அவர் காயமடைந்துள்ளார். ஆனால் இது கிரிக்கெட்டில் சகஜம் என்று கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications