ஷேவக் சதம்: டிராவை நோக்கி 4வது டெஸ்ட்

அடிலைட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலைடில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து சச்சினின் அற்புதமான சதத்தாலும், கும்ளே, ஹர்பஜன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தாலும் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 526 ரன்களை குவித்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 563 ரன்களை குவித்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 37 ரன்கள் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களை எடுத்தது.
இதில் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவக் 236 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 151 ரன்களை குவித்து சைமண்ட்ஸ் பந்துவீச்சில் கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்சில் ஜொலித்த சச்சின் 13 ரன்களுடனும், லட்சுமண் 12 ரன்களுடனும், ஹர்பஜன் சிங் 7 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால், ஆஸ்திரேலியா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்சில் 153 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.
ஆட்ட தொடர் நாயகன் விருது இந்த டெஸ்ட் தொடரில் 24 விக்கெட்டுகள் குவித்த ஆஸ்திரேலியாவின் பிரட் லீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி 3ம் தேதி இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா பங்கு பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications