For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிக்பாஷ் தொடர்: சாமுவேல்ஸை ஆபாசமாக திட்டிய வார்னேவுக்கு அபராதம்!

By Mathi
Shane Warne
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகளின் சாமுவேல்ஸை மிக ஆபாசமாக விமர்சித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் வார்னேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாக பிக்பாஷ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் சாமுவேல்ஸ். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டனா வார்னே விளையாடி வருகிறர். நேற்றைய போட்டியில் ஒரு கட்டத்தில் 2-வது ரன்னுக்காக டேவிட் ஹசியை சாமுவேல்ஸ் தள்ளிவிட்டார். அப்போது வார்னே, ஆபாசமாக சாமுவேல்ஸை திட்டியிருக்கிறார்.

அடுத்த ஓவரிலும் பீல்டிங்கில் இருந்த வார்னே வீசிய பந்து சாமுவேல்ஸை பதம் பார்த்தது. இதனால் இருவரிடம் மீண்டும் மோதல் நிலை உருவானது. பின்னர் மலிங்க வீசிய பந்தில் காயம்பட்டு ரத்தம் வந்ததால் சாமுவேல்ஸ் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் வார்னேவின் செயல் தவறானது என்றும் சாமுவேல்ஸும் விதிமீறி செயல்பட்டதாகவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. வார்னேவுக்கு 4,700 அமெரிக்க டாலர் அபராதம் விதித்திருக்கிறது.

Story first published: Monday, January 7, 2013, 10:53 [IST]
Other articles published on Jan 7, 2013
English summary
Australian star Shane Warne was banned for one match and fined Aus$4,500 (US$4,700) on Monday after an ugly, foul-mouthed clash with West Indian Marlon Samuels during a Twenty20 match in Melbourne.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+