For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குடும்பம் மாதிரி பாத்துக்கிட்டோமே, இப்படி செஞ்சுட்டாங்களே: ஷில்பா ஷெட்டி வருத்தம்

By Siva
Shilpa Shetty recalls IPL spot-fixing scandal
மும்பை: எங்கள் அணியினரை குடும்பத்தார் போன்று பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்கள் இப்படி செய்தது அதிர்ச்சியாக உள்ளது என்று ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய 3 வீரர்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் பல தரகர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரும், நடிகையுமான ஷில்பா ஷெட்டி கூறுகையில்,

ராஜஸ்தான் ராயல்ஸைச் சேர்ந்த எங்கள் அனைவருக்கும் இது வருத்தமாக உள்ளது. நாங்கள் எங்கள் அணியினரை குடும்பத்தார் போன்று தான் நடத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் அவர்கள் இவ்வாறு செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து இப்பொழுது தான் மீண்டு வருகிறோம். ஊழலை எங்களால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. நாங்கள் எப்பொழுதுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரங்கிற்குள் நுழைந்தோம் என்றார்.

Story first published: Monday, June 3, 2013, 12:50 [IST]
Other articles published on Jun 3, 2013
English summary
Rajasthan Royals co-owner Shilpa Shetty finds the IPL scandal as heartbreaking as they treat their team as family. Earlier police arrested 3 players of Rajasthan Royals team in connection with spot fixing in the IPL matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+