விழுந்து விழுந்து சிரித்து, காதோடு கிசுகிசுத்து... கவர்ந்திழுத்த சாக்ஷி, ஷில்பா
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓனரான நடிகை ஷில்பா ஷெட்டியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷியும் அருகருகே அமர்ந்து காதோடு கிசுகிசுத்தபடி, சிரித்தபடி, காணப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.
எதிரணிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட இருவரும் தொடர்ந்து பேசியபடியும், விழுந்து விழுந்து சிரித்தபடியும், காதோடு நெருக்கமாக கிசுகிசுத்தபடியும் காணப்ப்டடனர்.
ஏதாவது ஒரு அணி போர் அடித்தால், சிக்ஸ் அடித்தால், விக்கெட் விழுந்தால், மற்றவர்களை செல்லமாக அடித்தும் விளையாடிபடி காணப்பட்டனர் இருவரும்.

தவறாமல் வரும் சாக்ஷி
சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டிகளுக்குத் தவறாமல் வருகிறார் சாக்ஷி. ஒவ்வொரு போட்டியையும் உணர்ச்சி பொங்க, முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளை வெளிக்காட்டியபடி ரசித்துப் பார்ப்பார்.

ஜெய்ப்பூரில் புதுத் தோழி
வழக்கமாக சென்னையில் நடைபெறும் போட்டிகளின்போது கூடவே நடிகை ஸ்ருதி ஹாசன் அமர்ந்திருப்பார். ஆனால் ஜெய்ப்பூரில் சாக்ஷிக்குப் புதுத் தோழி கிடைத்தார்.

பொங்கப் பொங்கச் சிரிக்கும் ஷில்பா
ராஜஸ்தான் அணியின் உரிமையாளரான ஷில்பா ஷெட்டிதான் அந்த புதுத்தோழி. இருவரும் அருகருகே அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசித்தனர்.

ஷில்பா குழந்தையைக் கொஞ்சினார்
போட்டியின்போது ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா, குழந்தை வியான் ஆகியோருடன் வந்திருந்தார். ஷில்பாவின் குழந்தையிடம் பேசிக் கொஞ்சினார் சாக்ஷி சிங்.

அடுத்த வருஷம் தன் குழந்தையுடன் வருவாரா சாக்ஷி
அடுத்த ஐபிஎல் தொடரின்போது தன் குழந்தையுடன் சாக்ஷி டோணி வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...


Click it and Unblock the Notifications