Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பாட் பிக்ஸிங்கிற்காகவெல்லாம் ஐபிஎல் போட்டிகளை நிறுத்த முடியாது: பிசிசிஐ தலைவர் சீனிவாசன்

Shocked' Srinivasan says IPL will continue
மும்பை: ஸ்பாட் பிக்ஸிங் சம்பவத்தால் ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவிட முடியாது. அது தொடர்ந்து நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன் கூறுகையில்,

ஸ்பாட் பிக்ஸிங்கில் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கிரிக்கெட் போட்டியை நிறுத்தக் கூடாது. ஊழலை அகற்றத் தேவையான அனைத்தையும் செய்வோம். எங்கள் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்போம். பிற கிரிக்கெட் வீரர்கள் குறித்து போலீசாரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்படி தகவல் வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Story first published: Thursday, May 16, 2013, 15:24 [IST]
Other articles published on May 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+