
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் ரவீிந்திர ஜடேஜாவை வைத்து அனைவரும் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டனர். முதலில் சென்னை அணியின் கேப்டன் டோணி தனது ரசிகர்கள் டுவீட் செய்த சில ஜடேஜா ஜோக்குகளை ரீடுவீட் செய்தார்.
அந்த ஜோக்குகள்:
ரஜினி சாருக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்த கடவுள் சர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார்.
பயிற்சிக்காக மதியம் 3 மணிக்கு கிளம்பினால் சர் ஜடேஜா பயிற்சி பெற ஸ்டேடியமே அவரைத் தேடி வருகிறது.
சர் ஜடேஜா பந்தை பிடிக்க செல்லத் தேவையில்லை பந்தே அவரது கையில் வந்து சேரும்.
சர் ஜடேஜா ஜீப் ஓட்டினால் அது ஓடாது ரோடு ஓடும்.
இதையடுத்து ஆளாளுக்கு ஜடேஜாவை சர் ஜடேஜா என்றே அழைக்கத் துவங்கிவிட்டனர்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை அதன் மண்ணில் சென்னை அணி வீழ்த்தியது. அதன் பிறகு சென்னை அணியின் அல்பீ மோர்க்கல் செய்த டுவீட்டில் கூறியிருப்பதாவது, இரண்டே வார்த்தைகள்... சர் ஜட்டு...#சிஎஸ்கே என்று தெரிவித்துள்ளார்.
டூப்ளெஸ்ஸி டுவீட்: மீண்டும் சிறப்பான வெற்றி...சர் ஜடேஜா சூப்பராக விளையாடினார். கொல்கத்தா அணியை அதன் மண்ணில் வெல்வது எளிதல்ல. #விசில்போடு.
இது குறித்து ஜடேஜாவிடம் கேட்டதற்கு, அனைவரும் என்னைப் பற்றி ஜோக் சொல்லி என்ஜாய் செய்கின்றனர். தற்போதைக்கு எங்கள் அணிக்கு இது தான் டைம் பாஸ் என்றார்.