Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவரானார் ஸ்ரீகாந்த்!

{image-krish srikkanth250_27092008.jpg tamil.mykhel.com}மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இன்று தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக சஷாங் மனோகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 79வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் இன்று கூடியது. இதில் இதுவரை தலைவராக இருந்து வந்த சரத் பவாருக்குப் பதில் சஷாங் மனோகர் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு மனோகர் இப்பொறுப்பை வகிப்பார்.

நாக்பூரைச் ேசர்ந்த வக்கீலான மனோகர், விதர்பா கிரிக்கெட் சங்க துணைத் தலைவராக தற்போது இருக்கிறார். கடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று புதிய பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

புதிய செயலாளராக தற்போது வாரியத்தின் பொருளாளராக இருக்கும் சீனிசவாசன் பதவியேற்றார்.

புதிய இணைச் செயலாளராக சஞ்சய் ஜெகதலே, பொருளாளராக பான்டோவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுதவிர துணைத் தலைவர்களாக அருண் ஜெட்லி (வடக்கு), லலித் மோடி (மத்தி), சிரயு அமீன் (மேற்கு), ஏ.கங்குலி (கிழக்கு), ஷிவ்லால் யாதவ் (தெற்கு) ஆகியோரும் தேர்வானார்கள்.

புதிய தேர்வுக் குழு:

வெங் சர்க்கார் தலைமையிலான தேர்வுக் குழுவுக்குப் பதில் புதிய தேர்வுக் குழுவும் இன்று தேர்வு செய்யப்பட்டது.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புதிய தேர்வுக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தென் பிராந்திய தேர்வாளராகவும் அவர் செயல்படுவார். வடக்குக்கு யாஷ்பால் சர்மா, மத்திக்கு நரேந்திர ஹிர்வானி, மேற்குக்கு சுரேந்திர பவே, கிழக்கு ராஜா வெங்கட் ஆகியோர் தேர்வாளர்ளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் அபய் குருவில்லா தேர்வானார்.

ஜூனியர் தேர்வுக் குழுவின் பிற தேர்வாளர்களாக சஞ்சய் தேசாய் (தெற்கு), சஞ்சீவ் சர்மா (வடக்கு), ராஜேஷ் போரா (கிழக்கு), ஆர்.எஸ். ஹான்ஸ் (மத்தி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஓய்வு பெறும் வாரியத் தலைவர் சரத் பவார், வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டியின் தலைவராக செயல்புவார். ராஜீவ் சுக்லா, நிதிக் கமிட்டி தலைவராக இருப்பார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+