ஏற்கனவே ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி விழி பிதுங்கிய 3 பாக். வீரர்கள்
டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக 3 பாகிஸ்தான் வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அப்போது லார்ட்ஸில் உள்ள புனித ஜான்ஸ் உட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்பாட் பிக்ஸிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப் மற்றும் முகமது ஆமிர் ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கை எடுத்தது.

சல்மான் பட்
ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக சல்மான் பட் 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. மேலும் அவரின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது.

முகமது ஆசிப்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த முகமது ஆசிப் 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பட்டுடன் சேர்த்து ஆசிபின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.

முகமது ஆமிர்
சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய முகமது ஆமிருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 5 ஆண்டுகள் தடை விதித்தது. அவரின் ஒப்பந்தமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ரத்து செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications