Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரச்சினைய இத்தோட விட்ருப்பா ஸ்ரீசாந்த், இல்லாட்டி... கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தோல்வி விரக்தியில் ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்து விட்டதாக கூறப்பட்டது. சமீபத்தில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஸ்ரீசாந்த், ஹர்பஜன்சிங் தன்னை கன்னத்தில் அடிக்கவில்லை. முழங்கையால் வேண்டுமென்றே குத்தினார் என்று புதிய சர்ச்சையை கிளப்பினார்.

மீண்டும் இந்த பிரச்சினையை கிளப்பினால் ஸ்ரீசாந்துக்கு நோட்டீசு அனுப்பப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல்வி...

தோல்வி...

2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் போது மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி கண்டது.

அழுதார்...

அழுதார்...

இரு அணி வீரர்களும் கைகுலுக்கிய சிறிது நேரத்தில் ஸ்ரீசாந்த் அழும் காட்சி டெலிவிஷனில் ஒளிபரப்பானது. தோல்வி விரக்தியில் ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ‘பளார்' என்று அறைந்து விட்டதாக கூறப்பட்டது.

அடிக்கல... குத்துனாரு

அடிக்கல... குத்துனாரு

சமீபத்தில் ஐ.பி.எல். போட்டியில் கம்பீரும்-விராட்கோலியும் நேருக்கு நேர் மோத முயன்ற சம்பவத்தை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஸ்ரீசாந்த், ஹர்பஜன்சிங் தன்னை கன்னத்தில் அடிக்கவில்லை. முழங்கையால் வேண்டுமென்றே குத்தினார் என்று புதிய சர்ச்சையை கிளப்பினார்.

எச்சரிக்கை...

எச்சரிக்கை...

இதேபோல் சமீபத்தில் களத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட விராட்கோலி (பெங்களூர் கேப்டன்), கம்பீர் (கொல்கத்தா கேப்டன்) ஆகியோரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

Story first published: Monday, April 15, 2013, 19:05 [IST]
Other articles published on Apr 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+