நெஹ்ரா அபாரம்-இறுதிப் போட்டியில் இந்தியா

நேற்று கொழும்பில் நடந்த போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் நியூசிலாந்தி பேட் செய்தது.
இந்தியப் பந்து வீச்சாளர்களின் அபாரப் பந்த வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்திற்குத் திரும்பியுள்ள ஆசிஷ் நெஹ்ரா அபாரமாக பந்து வீசினார். துல்லியமான அவரது பந்து வீச்சை சமாளிக்க நியூசிலாந்து வீரர்கள் திணறினர்.
அவருக்குத் துணையாக யுவராஜ் சிங்கும் தனது ஸ்பின் பவுலிங்கால் நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தார். நெஹ்ராவும், யுவராஜ் சிங்கும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 155 ரன்களில் சுருண்டது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா, 6 விக்கெட்கள் கைவசம் இருக்க, 41வது ஓவரிலேயே வெற்றி இலக்கைத் தொட்டது.
இந்தியாவின் பேட்டிங்கின்போது ஆரம்பத்தில் லேசான சறுக்கல் காணப்பட்டது. திணேஷ் கார்த்திக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சச்சினும், டிராவிடும் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் சேர்ந்து 60 ரன்களைச் சேர்த்தனர்.
2 ஆண்டுகளுக்குப் பின்னர் விளையாட வந்துள்ள டிராவிட் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சச்சின் 46 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது ஒரு கட்டத்தில்.
அதேபோல யுவராஜ் சிங்கும் 8 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில், கேப்டன் டோணியும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
ரெய்னா 45 ரன்களும், டோணி 35 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து குவித்த ரன்கள் 72.
ஆட்ட நாயகனாக ஆசிஷ் நெஹ்ரா தேர்வானார்.
இந்தப் போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரே ஒரு போட்டியில்தான் மோதும். தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை.
நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் இலங்கையுடன் தோல்வியுற்றிருந்தது. நேற்று இந்தியாவிடம் தோற்று விட்டது. இதையடுத்து தொடரிலிருந்து அது வெளியேறியுள்ளது.
இந்தியாவும், இலங்கையும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. திங்கள்கிழமை இரு அணிகளுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications