இந்திய அணியின் பந்துவீச்சு சரியில்லை-ஸ்ரீகாந்த்
கொல்கொத்தா: இந்திய அணியின் பந்துவீச்சு முழு திறமையுடன் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியள்ளார்.
கொல்கொத்தா டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில் அவர் கூறியதாவது:
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. ஆனால் பந்துவீச்சு முழு திறமையுடன் இல்லை. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீசவில்லை. விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை.
ஹர்பன்சிங்கின் முதல் இன்னிங்ஸ் தான் நன்றாக இருந்தது. ஆனால் கடைசிநாள் ஆட்டம் எடுபடவில்லை.
வேகப்பந்தில் இந்திய அணிக்கு உள்ள குறைபாடு இன்னும் நீங்கவில்லை. ஜாகீர்கானின் பந்து வீச்சில் வேகம் பத்தாது. வேகம் இல்லாமல் பேட்ஸ்மேன்களை எப்படி தடுமாற வைப்பது
பாகிஸ்தான் வீரர்கள் கமரன் அக்மலும் முகமது யூசுப்பும் அசத்தலாக விளையாடினார்கள். அதிலும் சுழற் பந்துகளை சரியாக கணித்து அடித்தனர். ஆனால் டோனியின் ஆட்டம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற மாதிரி இல்லை, அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
எல்லா பந்துகளையும் அவர் வேகமாக அடிக்க நினைக்கிறார். அது தவறானது. பந்தை கணித்து அதற்கு ஏற்ப ஆடினால் தான் அவருக்கு நல்லது என்றார் ஸ்ரீ.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications