
பொம்பளைங்க தோத்தாங்க போங்கோ...
இதில் சித்து பேசுவாரே பார்க்கலாம்... நம்ம ஊரு சொந்தபந்தம், முத்தாரம் போன்ற சீரியல்களில் வரும் பெண்கள் பேசுவதை விட ரொம்ப ஓவராகப் பேசுவார்.... அதாவது பேசிக் கொண்டே இருப்பார்.

ஆனா சும்மா சொல்லக் கூடாது
ஆனால் சும்மா சொல்லக் கூடாது. உண்மையில் நல்லாவே பேசுவார். நிறுத்தி நிதானமாக, வார்த்தைகளை பொறுமையாக அடுக்கி வைத்து அவர் பேசும்போது அட அட அழகு...ஆனால் நமக்குத்தான் அவர் என்ன பேசினார் என்று கடைசி வரை புரியாது.

குட்டிக் கவிதை.. குஷால் சிரிப்பு
அவரது பேச்சின்போது முத்தாய்ப்பாக ஒரு கவிதையை தூக்கி போட்டு விடுவார். அதை 'க.க.க.போ' என்று வடிவேலு பாராட்டுவது போல நாமும் பாராட்டியே ஆக வேண்டும் - ஒன்றும் புரியாவிட்டாலும்.

ஸ்ரீகாந்த்திடம் மாட்டிக் கொண்டார்
ஆனால் நேற்று ஸ்ரீகாந்த்திடம் வசமாக சிக்கிக் கொண்டார் வாரே வா.. சித்து. நேற்று இறுதிப் போட்டி முடிந்ததும் எக்ஸ்ட்ரா இன்னிங்ஸில் சித்துவும், ஸ்ரீகாந்த்தும், வெற்றி தோல்வி குறித்து விவாதித்தனர். பேச்சின் முடிவில் இந்தியில், சித்து அழகான கவிதை ஒன்றைச் சொன்னார். அதைக்கேட்ட ஸ்ரீகாந்த், ஏம்ப்பா இது நல்லாருக்கே இதை ஆங்கிலத்தில் சொன்னா அத்தனை பேருக்கும் புரியுமே என்று சொன்னார்.

கியா பேசுறாகே ஸ்ரீகாந்த்
அதைக் கேட்ட சித்து, என்ன சொல்றே நீ. இது தேசிய பாஷை. இது எல்லோருக்கும் புரியுமே என்று படபடப்போடு சொன்னார்.

ஏண்டா டேய்....!
அதைக் கேட்டு டென்ஷனான ஸ்ரீகாந்த் தனக்கே உரிய குசும்புத்தனத்தோடு, ஏண்டா டேய். நான் தமிழ்ல்ல பேசுனா உனக்குப் புரியுமா என்று கேட்க, அவர் என்ன பேசுகிறார் என்று புரியாமல் குழம்பியபடி பார்த்தார் சித்து.
ஸ்ரீகாந்த் அண்ணாத்தே ஹைதராபாத் அணிக்கு மென்டாராக இருந்தாலும் கூட நம்மவர் என்பதை நச்சுன்னு நிரூபிச்சுட்டாரு போங்கோ....


Click it and Unblock the Notifications











