Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன் டிவி ஐபிஎல் அணியின் கேப்டனாக இலங்கையின் சங்கக்கரா நியமனம்

Sangakkara
ஹைதராபாத்: சன் குழுமத்தின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக குமார சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் ஐபிஎல் அணியை வாங்கியுள்ள சன் டிவி குழுமம், அதற்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிட்டுள்ளது. இதன் பயிற்சியாளராக டாம் மூடியும், மென்டார்களாக ஸ்ரீகாந்த், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அணியின் கேப்டனையும் சன் குழுமம் அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான குமார சங்கக்கரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய லோகோ அறிமுக விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதன் பின்னர் கேப்டனாக சங்கக்கரா நியமிக்கப்பட்டுள்ள செய்தியை சன்ரைசர்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.

ஏற்கனவே ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸாக இருந்தபோதே அதன் கேப்டனாக சங்கக்கரா பணியாற்றியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

மேலும் ஹைதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களான டேல் ஸ்டெயின், டுமினி, ஜூவான் தெரான், கேமரூன் ஒயிட், கிறிஸ் லின் ஆகியோர் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

Story first published: Friday, December 21, 2012, 9:14 [IST]
Other articles published on Dec 21, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+