Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன் ரைசர்ஸ் சின்னம்: தங்க ராஜாளியின் பின்னால் சூரியன்

ஹைதராபாத்: ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள ஹைதராபாத் அணியான 'சன் ரைசர்ஸ்' அணியின் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ராஜாளி சிறகை விரித்து இருக்க அதன்பின்னால் சூரியன் உதித்து வருவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட சின்னம் உண்டு. இந்த சின்னம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வீரர்கள் விளையாடுவார்கள். அதை விளம்பரப்படுத்தவும் செய்வார்கள்.

ஹைதராபாத் அணியை முன்பு வாங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சின்னமாக சீறிவரும் காளை இருந்தது. இப்போது சன் குழுமம் ஹைதராபாத் அணியை வாங்கியபின்னர் அதன் பெயரும் சின்னமும் மாறியுள்ளது.

சன் ரைசர்ஸ் சின்னம் அறிமுகம்

சன் ரைசர்ஸ் சின்னம் அறிமுகம்

சன் ரைசர்ஸ் அணிக்கான புதிய சின்னம் அறிமுக விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. மிகப்பெரிய ராஜாளி சிறகை விரித்து இருக்க அதன் பின்னால் தங்க நிற சூரியன் கதிர்களை பரப்பி உதித்து வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சன் குழுமத்தையும், பெயரையும் இது நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஸ்ரீகாந்த், லட்சுமணன்

ஸ்ரீகாந்த், லட்சுமணன்

சின்னம் அறிமுக விழாவில் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, ஸ்ரீகாந்த், வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக செயல்பட்டு வந்த ஸ்ரீகாந்த் மற்றும் சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் சன் ரைசர்ஸ் அணியின் மென்டார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு அணிக்கும் ஒரு சின்னம்

ஒவ்வொரு அணிக்கும் ஒரு சின்னம்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் ஒற்றைச் சிங்கம் வாயை பிளந்து கொண்டிருக்கும். மும்பை இன்டியன்ஸ் அணிக்கு சக்கரம் சின்னமாக இருக்கும். டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எரியும் பந்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இரட்டை சிங்கம் இருக்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வீரனின் தலை இருக்கும். புனே வாரியர்ஸ் அணியில் ஈட்டியை தாங்கிய குதிரை வீரன் இருப்பான். ராஜஸ்தான் ராயல், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு பெயரை தாங்கிய சின்னமும், அந்த அணியின் நிறங்களும் மட்டுமே உள்ளது.

விளம்பரம் ரெடி

விளம்பரம் ரெடி

ஐபிஎல் அணிகளில் தோனி தலைமையிலான "சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு செம விசில் அடிங்க..." என்பதுதான் இதுவரை பிரபலமாக இருந்த விளம்பரம். ஆனால் இப்போது சன் ரைசர்ஸ் அணி தனது சின்னத்தை பிரபலப்படுத்த இப்போதே விளம்பரத்தை தொடங்கிவிட்டது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பிய சன் டிவி இனி தன்னுடைய அணியான சன் ரைசர்ஸ் அணிக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, December 21, 2012, 11:38 [IST]
Other articles published on Dec 21, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+