Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்: அணி உரிமையாளர்கள், வீரர்களை ஆட்டிப் படைக்கும் மூட நம்பிக்கைகள்

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி பேட் செய்யும்போது டக் அவுட் பகுதியில் உட்காரமாட்டாராம் அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன். அப்படி உட்கார்ந்தால் விக்கெட் விழுந்துவிடும் என்ற பயமாம்.

ஐபிஎல் போட்டிகளின்போது அணி உரிமையாளர்களுக்கும் சரி, வீரர்களுக்கும் சரி பல்வேறு மூட நம்பிக்கை உள்ளது. போட்டியைக் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த கூத்தையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள்.

சென்னை அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டி உள்பட பலருக்கு இந்த மூட நம்பிக்கை உள்ளது.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் முன்பே இவ்வளவு ரன் எடுக்க வேண்டும் என்று நினைக்க மாட்டாராம். அப்படி நினைத்தால் அது புஸ்ஸாகிவிடுமோ என்ற பயம்.

குருநாத் மெய்யப்பன்

குருநாத் மெய்யப்பன்

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்யும்போது அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் பவுண்டரி அருகே வீரர்கள் அமர்ந்திருக்கும் டக் அவுட் பகுதிக்கு வரவோ, உட்காரவோ மாட்டாராம். அப்படி உட்கார்ந்தால் விக்கெட்டுகள் சரிந்துவிடும் என்ற பயமாம்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமயைாளரான ஷில்பா ஷெட்டி தனது அணி விளையாடும்போது ஒரே கையில் 2 கைக்கடிகாரம் கட்டியிருப்பார். அப்படி செய்தால் அவரது அணி வெற்றி பெறும் என்று அவருக்கு நம்பிக்கை.

கம்பீர்

கம்பீர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பேட்டிங் செய்கிறாரோ இல்லையோ தனது அணி பேட்டிங் செய்யும்போது 20 ஓவர் முடியும் வரை கால்களில் பேட்டிங் பேடுடன் தான் உட்கார்ந்திருப்பார். அப்படி இருந்தால் அவர் அணி வெற்றி பெறுமாம். இந்த பழக்கத்தை கடந்த ஆண்டு முதல் கடைபிடித்து வருகிறார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணி தான் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

கிங்ஸ் XI பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தனது அணி விளையாடும்போது தான் நீலக் கலர் ஜீன்ஸ் அணிந்திருந்தால் அது வெற்றி பெறும் என்று நம்புகிறவர்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிட் கிரிக்கெட் மைதானத்திற்குள் வலது காலை எடுத்து வைத்து தான் வருவார். அப்படி வந்தால் அவரது அணி வெற்றி பெறும் என்பது அவரது நம்பிக்கை.

Story first published: Friday, May 24, 2013, 17:20 [IST]
Other articles published on May 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+