இந்தியா 'டூர்': சைமண்ட்ஸ் இல்லை!

இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா கலந்து கொள்கிறது. இதற்கான 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சர்ச்சைக்குரிய சைமண்ட்ஸ் இடம் பெறவில்லை. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார் சைமண்ட்ஸ் என்பது
நினைவிருக்கலாம்.
சைமண்ட்ஸ் இந்தியா தொடருக்கு முழு அளவில் பொருத்தமானவராக இல்லை. அவர் தன்னை சுய பரிசோதனை கொண்டு முழு அளவில் தயாரான பின்னர் அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படுவார்.
ஒரு கிரிக்கெட் வீரராக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி சைமண்ட்ஸ் மாற வேண்டும். அதுவரை அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. உலகின் நம்பர் ஒன் அணியின் வீரர் என்றால் அவருக்கென்று சில தகுதிகள் இருக்க வேண்டும். அது சைமண்ட்ஸிடம் வர வேண்டும் என்று கூறியுள்ளார் தேர்வாளர் குழு தலைவர் ஆண்ட்ரூ ஹில்டிச்.
சைமண்ட்ஸ் நீக்கபப்ட்டுள்ள நிலையில் 36 வயதாகும் சுழற்பந்துவீச்சாளர் மெக்கெய்ன் அணியில் இடம் பிடித்துள்ளார். இதேபோல வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேசன் கிரெஜாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications