Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. டுவென்டி 20 அணியில் சைமண்ட்ஸ் சேர்ப்பு

Symonds
ஆமெல்போர்ன்: அணிக் கூட்டத்திற்கு வராமல் மீன் பிடிக்கப் போய் அணியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டுள்ள மூத்த வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், அந்நாட்டு டுவென்டி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் சர்ச்சைக்குரிய வீரர் சைமண்ட்ஸ். சமீபத்தில் நடந்த அணிக் கூட்டத்திற்கு வராமல் மீன் பிடிக்கப் போய் விட்டார். இதனால் கடுப்பான ஆஸ்திரேலிய தேர்வாளர்கள், சைமண்ட்ஸை அணியிலிருந்து நீ்க்கினர். இதனால் இந்திய டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க முடியவில்லை.

இந்த நிலையில் வருகிற வெள்ளிக்கிழமை பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ள எமிரேட்ஸ் ஆல் ஸ்டார் டுவென்டி 20 போட்டியில் கலந்து கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணியில் சைமண்ட்ஸுக்கு இடம் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை செயலதிகாரி ஜேம்ஸ் சுதர்லாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன் பிடி பிரச்சினையில் சிக்கி அணியிலிருந்து நீக்கப்பட்ட சைமண்ட்ஸ், திருத்திக் கொள்ள அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதால், அவருக்கு அணியில் மீண்டும் இடம் தரப்படுகிது.

அவருடைய கடின உழைப்பே மீண்டும் விளையாடும் வாய்ப்பை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

சைமண்ட்ஸுடன் கடந்த ஒரு மாதமாகவே நான் தொடர்ந்து தொலைபேசி தொடர்பு வைத்து வருகிறேன். அவர் மீது சுமத்தப்பட்ட கட்டாய ஓய்வை அவர் சரியாகப் புரிந்து கொண்டு மறு சீரமைப்பு நடவடிக்கைளை முழுமையாக மேற்கொண்டு தெளிவடைந்துள்ளார்.

இப்போது மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு விளையாட அவர் தயாராகி விட்டார். இது மகிழ்ச்சி தருகிறது.

ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் பெற கடுமையாக போராடினார் சைமண்ட்ஸ். அது அடுத்து வரும் மாதங்களில் அவரது ஆட்டங்களில் வெளிப்படும் என நம்புகிறேன் என்றார்.

மீண்டும் சைமண்ட்ஸ் அணிக்குத் திரும்புவதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+