'இந்தியாவில் இனவெறிக்கு ஆளானார் ஆண்ட்ரூஸ்'-ஆஸி. குற்றச்சாட்டு
பரோடா:
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை பரோடா கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி வார்த்தைகளால் திட்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் புகார் கூறியுள்
ளது.உலக அளவில் இனவெறி வார்த்தைகளால் சக அணியினரை விமர்சிப்பதில் பெயர் பெற்றவர்களாக ஆஸ்திரேலிய அணியினரை கூறுவார்கள். ஆனால் அந்த அணியைச் சேர்ந்த சைமண்ட்ஸை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறி வார்த்தைகளால் திட்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் புகார் கூறியுள்ளது.
சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியர் என்றாலும் கூட அவர் ஒரு பாதி கருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரோடாவில் நேற்று நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5வது ஒரு நாள் போட்டியின்போது இந்தியா பேட்டிங் செய்தபோது, சைமண்ட்ஸ் பவுண்டரி பகுதியில் பீல்டிங் செய்தார்.
அப்போது ரசிகர்களில் சிலர் சைமண்ட்ஸைப் பார்த்து குரங்கு போல பாவனை செய்து கிண்டலடித்ததாக ஆஸ்திரேலிய அணியின் மீடியா மேலாளர் பிலிப் போப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சைமண்ட்ஸ் பீல்டிங் செய்தபோது ரசிகர்களில் சிலர் குரங்கு போல பாவனை செய்து கேலி செய்தனர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளோம். பரோடா கிரிக்கெட் சங்கத்திலும் புகார் செய்துள்ளோம்.
இருப்பினும் இதை பெரிதுபடுத்த நாங்கள் விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம், அடுத்த நடக்கவுள்ள 2 போட்டிகளிலும் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார்.
முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குப் போனபோது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பந்து வீச்சாளர் மாண்டி பனீசரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இனவாத வார்த்தைகளால் சுட்டனர். அதே அணியில் இடம் பெற்றிருந்த தென்னாப்பிரிக்க ஆங்கிலேயரான கெவின் பீட்டர்சனையும் விமர்சித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
விளையாட்டையும், அதில் ஈடுபடும் வீரர்களையும் இனவாத நோக்கில் பார்ப்பதை அனைத்து நாட்டு ரசிகர்களும், வீரர்களும் விட்டு விட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் எழாமல் தடுக்கலாம்.
ஸ்ரீசந்த் மீது பாண்டிங் பாய்ச்சல்:
முன்னதாக இந்திய பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த் ஆஸ்திரேலிய வீரர்களை கேலி செய்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் புகார் கூறியிருந்தார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தி ஹெரால்டு சன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், சண்டிகர் போட்டியின் போது ஸ்ரீசந்த் எங்களிடம் மோசமாக நடந்து கொண்டார். இத்தனைக்கும் அன்று அவர் அணியில் இடம்பெறவில்லை.
ஆனால் மைதானத்திற்கு வெளியே இருந்தபடி கூச்சலிட்டபடியும், கத்திக் ெகாண்டும் இருந்தார். ஆஸ்திரேலியா தோற்கப் போகிறது என்று கூறியபடி இருந்தார்.
மேலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும் வீரர்களைப் பார்த்தும், உள்ளிருந்து வரும் வீரர்களையும் நோக்கி கேலி செய்தபடி இருந்தார்.
அதேபோல எங்களது வீரர்கள் ஆட்டமிழந்தாலும் மோசமாக கேலி செய்தார். ஆட்டத்திற்கு இடையே கிடைத்த இடைவெளியில் அவர் இந்திய வீரர்களுக்கு டிரிங்க்ஸ் கொண்டுவந்தபோது இதுகுறித்து நான் கேட்டேன். அதற்கு அவர் நான் உங்களை கேலி செய்யவில்லை என்றார்.
இதுகுறித்து நான் புகார் செய்ய விரும்பவில்லை என்றார் பாண்டிங். அதேசமயம், இந்திய வீரர் ஹர்பஜன் சிங் முன்பு, ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், திட்டியதாகவும் முன்பு புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications