Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எஸ்.... டுவென்டி 20 கிரிக்கெட்டுக்கு புது உயிர் கொடுத்துள்ளது: ரிச்சர்ட்ஸ்

மும்பை: டுவென்டி 20 போட்டிகள், கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

ரிச்சர்ட்ஸ் விளையாடியதைப் பார்த்த தலைமுறைக்கு இன்னும் கூட அவரது அட்டகாசமான ஆட்டத் திறனை மறக்க முடியாது. அப்படி ஒரு ஆட்டம் ஆடியவர் ரிச்சர்ட்ஸ்.

தற்போது டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்க வந்த எமன் என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் கிரிக்கெட்டுக்கு டுவென்டி 20 போட்டிகள் புத்துயிர் கொடுப்பதாக கூறியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...

நானும் அப்படித்தான் நினைச்சேன்

நானும் அப்படித்தான் நினைச்சேன்

ஒரு சமயத்தில் நானும் கூட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு டுவென்டி 20 போட்டிகள் எமன் என்றுதான் நினைத்தேன். குறிப்பாக இந்தியாவில் வேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டை அது குழி தோண்டி புதைத்து விடும் என்று கூட பயந்தேன்.

ஆனால் அப்படியல்ல...

ஆனால் அப்படியல்ல...

ஆனால் அப்படி அல்ல என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளேன். இதுவும் கிரிக்கெட் தானே. கிரிக்கெட் எப்படி கிரிக்கெட்டை அழிக்க முடியும். மாறாக, டுவென்டி 20 போட்டிகள் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளித்துள்ளன.

டெஸ்ட் வேற.. டுவென்டி 20 வேற

டெஸ்ட் வேற.. டுவென்டி 20 வேற

டெஸ்ட் போட்டிகளை ரசிப்பவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள். இன்னொரு பக்கம் டுவென்டி 20க்கு ரசிகர்கள் இருப்பார்கள். இது நல்லதுதான்.

எனக்கு ரெண்டுமே ஒன்றுதான்

எனக்கு ரெண்டுமே ஒன்றுதான்

என்னைப் பொறுத்தவரை ரெண்டுமே கிரிக்கெட்தான். எனவே ரெண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். டெஸ்ட் போட்டி அழகானது. அதை இளைய தலைமுறை உணர வேண்டும். அதேபோல இளைய தலைமுறைக்கேற்ற ஆட்டம் டுவென்டி 20 என்பதை நாமும் உணர வேண்டும்.

கோஹ்லி பிடிக்கும்

கோஹ்லி பிடிக்கும்

எனக்கு இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லியின் ஆவேசமான ஆட்டம் பிடித்திருக்கிறது. இதை முரட்டுத்தனம் என்று பலர் வர்ணித்தாலும் கூட, அது அதீத நம்பிக்கையின் வெளிப்பாடு என்பது எனது கருத்தாகும். நானும் கூட அப்படித்தானே அப்போது இருந்தேன்.

இது ஜென்டில்மேன் கிரிக்கெட் அல்ல

இது ஜென்டில்மேன் கிரிக்கெட் அல்ல

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று எனது தந்தை சொல்வார். ஆனால் ஆஸ்திரேலியா போய் விளையாடியபோது அது தவறு என்று உணர்னந்தேன். எங்களை எப்படியெல்லாம் கிண்டல் செய்தார்கள் தெரியுமா... கிளைவ் லாயிட் மிகவும் மனம் உடைந்து போனார். 5-1 என்ற கணக்கில் டெஸ்ட்டில் தோற்றோம். ஆனால் பின்னாளில் நாங்கள் அவர்களை ஓட விட்டோம். அது தனிக் கதை என்றார் ரிச்சர்ட்ஸ்.

ஹெல்மெட்டே போடாத ஒரே வீரர்

ஹெல்மெட்டே போடாத ஒரே வீரர்

17 வருடம் கிரிக்கெட் ஆடியவர் ரிச்சர்ட்ஸ். இந்த காலகட்டத்தில் எந்தப் போட்டியிலும் அவர் ஹெல்மட் போட்டுக் கொண்டதே இல்லை.அப்படி ஒரு தில் பார்ட்டி ரிச்சர்ட்ஸ்.

செத்துப் போய்ட்டேன்...

செத்துப் போய்ட்டேன்...

1991ல் ரிடையர்ட் ஆனார் ரிச்சர்ட்ஸ். அது குறித்து அவர் கூறியபோது, எனது ஓய்வு முடிவை அறிவித்தபோது நான் செத்துப் போய் விட்டதாகவே உணர்ந்தேன். என்னை குழி தோண்டிப் புதைத்து விட்டதாக உணர்ந்தேன் என்றார் சிரித்தபடி.

இல்லை விவ்... இன்னும் உங்களது ஸ்டைலிஷான ஆட்டம் எங்கள் கண் முன்பு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது!

Story first published: Thursday, May 9, 2013, 13:35 [IST]
Other articles published on May 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+