கேப்டன் பொறுப்பிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க டோணி, சொல்கிறார் கவாஸ்கர்

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறிது காலத்திற்கு டோணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் 2015 உலகக் கோப்பைப் போட்டிக்கு அவரும், அணியும் முழுமையாக தயாராக முடியும். மேலும் தனது பேட்டிங் திறமையையும் அவர் அதிகரித்துக் கொள்ள முடியும்.
உலகக் கோப்பைப் போட்டிக்கு இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. எனவே இப்போது டோணி கேப்டன் பொறுப்பிலிருந்து சிறிது காலத்திற்கு விலகியிருந்தால் பெரிய அளவில் அவருக்குப் பாதகம் ஏற்பட்டு விடாது. அவருக்கு அது கூடுதல் பலன்களையேத் தரும்.
இப்போது என்றால் உடனே கூட தேவையில்லை. ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பின்னரோ அல்லது 2013 பிற்பாதியிலோ அவர் ஓய்வைப் பற்றி சிந்திக்கலாம்.
அதேசமயம், இந்த பிரேக்கானது டோணியே விரும்பி எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது.
டோணி விலகியிருக்கும் காலத்தில் விராத் கோஹ்லியை கேப்டனாக்கலாம். இதன் மூலம் அணியிலும் இளம் ரத்தம் பாய்ச்சியது போல இருக்கும். அவரிடம் மன்சூர் அலிகான் பட்டோடியைப் போன்ற திறமை உள்ளது. அது அணிக்கு பலன் தரும். மேலும் எதிர்காலத்தில் நிரந்தர கேப்டனாகும் வாய்ப்பு இருப்பதாக அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மேலும் சிறப்பாக அவர் செயல்படுவார் என்றார் கவாஸ்கர்.
நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது...


Click it and Unblock the Notifications