Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட்டை விடுங்க, டுவென்டி 20ல் இந்தியா 'நம்பர் ஒன்'னாகப் போகுது!

துபாய்: டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சரமாரியாக அடி வாங்கி வந்தாலும் டுவென்டி 20 போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு பெருமை வரப் போகிறது. அதாவது டுவென்டி 20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் நாள் நெருங்கி விட்டது.

இங்கிலாந்து பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் முதலிடத்தைப் பிடித்து விடலாம்.

இங்கிலாந்துடன் 2 டுவென்டி 20 போட்டிகளில் இந்தியா அடுத்து விளையாடவுள்ளது. புனேவில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. அடுத்து பாகிஸ்தானுடன் 2 டுவென்டி 20 போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தப் போட்டி டிசம்பர் 25ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

நான்கிலும் வெல்ல வேண்டும்

நான்கிலும் வெல்ல வேண்டும்

இந்த நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று விட்டால் நாம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து விடலாம். பெரும் சோகத்துடன் முடிவடையவுள்ள இந்த கிரிக்கெட் ஆண்டை சற்றே ஆறுதலாக முடிக்கலாம்.

தற்போது 3வது இடம்

தற்போது 3வது இடம்

தற்போது டுவென்டி 20 தரவரிசையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இலங்கை உள்ளது. 2011 முதல் டுவென்டி 20 தரவரிசை அமலில் உள்ளது. இதுவரை இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு போட்டியில் தோற்றால்

ஒரு போட்டியில் தோற்றால்

ஒருவேளை இந்தியா நான்கில் ஒரு போட்டியில் தோற்று மற்ற மூன்று போட்டிகளில் வென்றால் 2வது இடத்தைப் பிடிக்க முடியும்.

எல்லாப் போட்டியிலும் தோற்றால் 7தான்

எல்லாப் போட்டியிலும் தோற்றால் 7தான்

அதேசமயம், நான்கு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவ நேரிட்டால், 3வது இடத்திலிருந்து 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விடும்.

Story first published: Thursday, December 20, 2012, 9:06 [IST]
Other articles published on Dec 20, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+