Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று 20-20 கிரிக்கெட் போட்டி - கண்காணிப்பு வலையில் ரசிகர்கள்


மும்பை:

இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 20-20 கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இன வெறி சர்ச்சையைத் தவிர்க்க ரசிகர்களைத் தீவிரமாக கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 20-20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடக்கிறது.

20-20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைத் தட்டியுள்ள தெம்பில் இந்தியா இருகிறது. உலகக் கோப்பைப் போட்டியில் தோற்ற கடுப்பில், இன்று பழி தீர்க்கும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

இதனால் இன்றைய போட்டி பெரும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூத்த வீரர்கள் இடம் பெறுவார்களா என்பது தெரியவில்லை. காரணம், தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இந்தியாவின் மும்மூர்த்திகளான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் இல்லை. முற்றிலும் இளைய ரத்தத்துடன் சென்ற இந்திய அணி அபாரமாக ஆடி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

எனவே இன்றைய போட்டியிலும், இளம் படை களம் இறங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 20-20 போட்டிகளில் தாங்கள்தான் சாம்பியன் என்பதை நிரூபிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. பழி வாங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா.

இதற்கிடையே, இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறி சர்ச்சை கிளம்பியுள்ளதால், பிரபோர்ன் ஸ்டேடியத்திற்கு போட்டியைக் காண வரும் ரசிகர்களைத் தீவிரமாக கண்காணிக்க பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டேடியம் முழுவதும் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டு ரசிகர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதுதவிர சாதாரண உடையில் போலீஸாரும் மைதானத்தில் பார்வையாளர்களுடன் உலவுவார்கள். இனவெறியை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்தினாலோ, சைகை காட்டினோலா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+