Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூர் டெஸ்ட் போட்டியில் ஆஸி.யை சந்திக்க தயார்: கும்ப்ளே

Anil kumble
பெங்களூர்: பெங்களூரில் நாளை தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியை சந்திக்க இந்திய அணி தயாராக உள்ளதாக கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கும், கும்ப்ளே தலைமையிலான இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

இந்தப் போட்டி குறித்து கும்ப்ேள இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தயார் நிலையில் இருக்கிறோம். சிறப்பாக பயிற்சி எடுத்துள்ளோம். 3 வாரகால பயிற்சி எங்களுக்கு புத்துணர்வை கொடுத்துள்ளது. இராணி கோப்பை போட்டியில் விளையாடியதும் நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியின் சவாலை சந்திக்கும் வகையில் ஒட்டுமொத்த அணியும் தயார் நிலையில் உள்ளது.

பிட்ச் சிறப்பாக உள்ளது. டெஸ்ட் போட்டிக்கேற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எனது சொந்த ஊர், சொந்த மைதானம். அது எனக்கு முழுமையாக சாதகமாக இருக்கும். எனவே வெற்றியுடன் இந்தத் தொடரை தொடங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆட்டத்தின்போது பிட்ச்சின் தன்மையைப் பொறுத்து பந்து வீச்சு வியூகத்தை வகுக்கவுள்ளோம்.

எந்தவித சர்ச்சைகளும் போட்டியின்போது இருக்காது என நம்புகிறேன். கடந்த காலத்தில் நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். கடந்த காலங்களில் பல பாடங்களைக் கற்றுக் கொண்டோம். அந்தத் தவறுகள் மீண்டும் நடக்காது.

ஆஸ்திரேலிய அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவாக உள்ளது. எனவே கவனமாக இருப்போம்.

சொந்த மண்ணில் கடைசிப் போட்டி..

பெங்களூரில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இதுவே கடைசி போட்டியாக இருக்கும் என நம்புகிறேன்.

ஓய்வு குறித்து நான் இதுவரை முடிவெடுக்கவில்லை. அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்காதீர்கள். எப்போது ஓய்வு பெறுவது என்று நான் விரும்புகிறேனோ அப்போது அதை அறிவிப்பேன். எனவே இதை இத்துடன் விட்டு விடுவோம் என்றார் கும்ப்ளே.

பத்ரிநாத், ஆர்.பி.சிங் விளையாடவில்லை:

இதற்கிடையே, நாளைய போட்டியில் இந்திய அணியில் பத்ரிநாத் மற்றும் ஆர்.பி. சிங் ஆகியோர் இடம் பெற மாட்டார்கள் என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாளைய போட்டியில் பத்ரிநாத்தும், ஆர்.பி.சிங்கும் இடம் பெற மாட்டார்கள். போட்டி தொடங்கும் முன்பு 11 வீரர்களும் அறிவிக்கப்படுவர். கூடுதலாக ஒரு ஸ்பின்னர் அல்லது பேட்ஸ்மேனை சேர்ப்பது குறித்து போட்டிக்கு முன்பு முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

இந்திய அணியின், பத்ரிநாத், ஆர்.பி.சிங் தவிர்த்த 13 வீரர்கள் விவரம்.

கும்ப்ளே, எம்.எஸ்.டோணி, ராகுல் டிராவிட், கங்குலி, கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், வி.வி.எஸ்.லட்சுமண், அமித் மிஸ்ரா, முனாப் படேல், வீரேந்திர ஷேவாக், இஷாந்த் சர்மா, சச்சின் டெண்டுல்கர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+