Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு! காம்பீர் நீக்கம்! ஹர்பஜன்சிங்குக்கு இடம்!!

Gautam gambhir and Harbhajan singh
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. காம்பீர் நீக்கப்பட்டு ஹர்ஜபன்சிங், முரளிவிஜய், ஷிகர் தவாண் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வருகை தரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் 22-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. மும்பையில் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு கூடி இந்திய அணியை தேர்வு செய்தது.

கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவாண் சேர்க்கப்பட்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹர்பஜன்சிங்கும் அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

இந்திய அணி விவரம்

கேப்டன் டோணி, டெண்டுல்கர், விராத் கோஹ்லி, அஸ்வின், ஓஜா, புஜாரா, இஷாந்த் சர்மா, ஷிகார் தவாண், வீரேந்திர சேவாக், ஹர்பஜன்சிங், புவனேஷ்வர் குமார், அசோக் டிண்டா, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Story first published: Sunday, February 10, 2013, 14:20 [IST]
Other articles published on Feb 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+