Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி போனதால் பாதிப்பில்லை: டோணி


அடிலைட்: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டதால் அணியில் யாருக்கும் வருத்தம் இல்லை. எந்தப் பாதிப்பும் இல்லை என்று இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், ஒரு நாள் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.டோணி கூறியுள்ளார். இதனால் கங்குலி விவகாரம்
மேலும் சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்ளிடம் அவர் கூறுகையில், கங்குலி நீக்கத்தால் அணியில் உள்ள வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளாக கூறப்படுவதில் உண்மை இல்லை. உண்மையில் பத்திரிக்கைள் மட்டத்தில்தான் பரபரப்பு நிலவுகிறது.

4வது டெஸ்ட் போட்டியை வெல்லும் ஒரே யோசனையில்தான் அனைத்து வீரர்களும் உள்ளோம். கங்குலி விவகாரம் எந்த வகையிலும் எங்களை பாதிக்கவில்லை. யாரும் கவலையுடனும் இல்லை.

ஒரு நாள் போட்டிகள் குறித்து இப்போதைக்கு யாரும் கவலைப்படவில்லை. அடிலைட் டெஸ்ட்டை வெல்வது மட்டுமே எங்களது குறிக்கோளாக உள்ளது.

அணி வீரர்களுக்கிடையே நல்ல தகவல் தொடர்பு இருக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே எங்களை அறிவுறுத்தியுள்ளார். ஒருவர் அணியில் இடம் பெறாவிட்டால் அவரிடம் தெளிவாக அதைச் சொல்லி விட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கேப்டனுக்கும், வீரர்களுக்கும் இடையே எந்த தகவல் தொடர்புப் பிரச்சினையும் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டோணி.

இதன் மூலம் தனக்கும், கங்குலிக்கும் இடையே சரியான தகவல் தொடர்பு இல்லை என்பதையும் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது. இதுவும் கூட கங்குலியை டோணி விரும்பாததற்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+