Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட்-சச்சின் தயாராகி விடுவார்: நிரஞ்சன் ஷா

மும்பை: இராணி கோப்பைப் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விலகி விட்டாலும் கூட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு அவர் தயாராகி விடுவார் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர்ந நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்.

எல்போ காயத்தால் அவதிப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர் சமீப காலமாக ஒரு போட்டியிலும் ஜொலிக்கவில்லை. 35 வயதாகும் டெண்டுல்கர் சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் சொதப்பினார்.

இந்த நிலையில் வதோதராவில் நாளை தொடங்கும் இராணிக் கோப்பைப் போட்டியில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்போ காயத்தைக் காரணம் காட்டி அதிலிருந்து விலகி விட்டார்.

இதனால் சச்சின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சச்சினுக்குப் பதிலாக நல்ல பார்மில் இருக்கும் தமிழக வீரர் பத்ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கு சச்சின் தயாராகி விடுவார் என நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவாரத்திற்கு சச்சின் ஓய்வெடுக்க வேண்டும் என அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளுக்கு சச்சின் தயாராகி விடுவார் என நம்புகிறோம் என்றார்.

இதுவரை 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின். பிரையன் லாரா படைத்துள்ள 11 ஆயிரத்து 953 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடிக்க இன்னும் 77 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.

மாஸ்டர் பிளாஸ்டர் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின், அதை எடுக்க கடுமையாக போராடி வருகிறார்.

சச்சினின் சாதனையில் 39 டெஸ்ட் செஞ்சுரிள், 42 ஒரு நாள் செஞ்சுரிகள் அடக்கம். 417 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் அதில் 16 ஆயிரத்து 361 ரன்களைக் குவித்து உலக சாதனையுடன் உள்ளார்.

1989ம் ஆண்டு முதல் விளையாடி வரும் சச்சின், கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2005ம் ஆண்டு அவருக்கு எல்போ காயத்தை சரி செய்ய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய சச்சின், சமீப காலமாக மீண்டும் எல்போ பிரச்சினையில் மாட்டி அவதிப்பட்டு வருகிறார்.

நாளை தொடங்கும் இராணி கோப்பைப் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும், ரஞ்சி சாம்பியனான டெல்லி அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+