நாளை சச்சினுக்கு 400வது ஆட்டம்
வதோதரா (ம.பி):
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நாளை தனது 400வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறார் சச்சின் டெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்குச் ெசாந்தக்காரரான சச்சின் நாளை இன்னொரு புதிய சாதனையைப் படைக்கவுள்ளார்.நாளை வதோதராவில் நடக்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5வது ஒரு நாள் போட்டி, சச்சினுக்கு 400வது போட்டியாகும்.
வதேதாராவில் உள்ள ரிலையன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
நாளைய போட்டியில் ஆடுவதன் மூலம் 400 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய 2வது வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுவார். முதல் வீரராக இலங்கையின் சனத் ஜெயசூர்யா உள்ளார்.
இதுவரை 399 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள சச்சின், 15 ஆயிரத்து 563 ரன்களைக் குவித்துள்ளார். 41 செஞ்சுரிகளை போட்டு உலக சாதனை படைத்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 44.21 ஆகும்.
ஒரு நாள் போட்டிகளில் 152 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார் சச்சின். பந்து வீச்சு சராசரி 44 ஆகும்.
ஜெயசூர்யா 401 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 12 ஆயிரத்து 178 ரன்களைக் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 32.73 ஆகும். மொத்தம் 25 சதங்களை அடித்துள்ளார்.
தற்ேபாது நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. நாளைய போட்டியிலும் தொடர்ந்து வரும் போட்டிகளிலும் (மொத்தம் 7 போட்டிகள்)வென்று இந்தியா தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications