Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம்: நிறைவேறாத சச்சின் டெண்டுல்கரின் கனவு

Tendulkar
மும்பை: ஒருநாள் போட்டிகளில் 49 முறை சதமடித்திருக்கும் சச்சின் தமது 50-வது சதத்தை அடிக்காமலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

தமது 16-வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கிய டெண்டுல்கர் 39-வது வயதில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் எடுத்த ரன்களின் சராசரி என்பது 44.83 ஆகும்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் மொத்தம் 49 முறை சதமடித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். அதேபோல் 96 முறை அரை சதம் அடித்திருக்கிறார். இருப்பினும் ஒருநாள் போட்டியில் சச்சின் 50வது சதமடிப்பதை தாம் எதிர்பார்ப்பதாக அவரது மனைவி அஞ்சலி அண்மையில் கூறியிருந்தார். ஆனால் அந்த 50-வது சதத்தை எட்டாமலேயே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருக்கிறார்.

ஒருநாள் போட்டியில் முதலாவது சதத்தை கொழும்பில் நடைபெற்ற ஆச்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அடித்தார். இதேபோல் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதலாவது உலக வீரர் என்ற பெருமையும் சச்சினுக்கு உண்டு.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். சச்சின் வீசிய பந்துகளின் எண்ணிக்கை 8,032! ஒருநாள் போட்டிகளில் சச்சின் பிடித்த கேட்சுகள் எண்ணிக்கை 140!.

Story first published: Wednesday, December 26, 2012, 10:38 [IST]
Other articles published on Dec 26, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+