20-20: இந்தியா பரிதாப தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20-20 போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 20-20 கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் எம்.எஸ்.டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் ஓவரின் 5வது பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்து. வீரேந்திர ஷேவாக் ரன் ஏதும் எடுக்காத நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து கம்பீருடன், திணேஷ் கார்த்திக் இணைந்தார். இருவரும் சேர்ந்து அடித்து பின்னுவார்கள் என்று பார்த்தால் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
2வது ஓவன் 4வது பந்திலேயே கம்பீர் வீழ்ந்தார். அவர் எடுத்த ரன்கள் 9. 3வது ஓவரின் கடைசிப் பந்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார் திணேஷ்
கார்த்திக்.
இதையடுத்து வந்த ராபின் உத்தப்பா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ரோஹித் சர்மா 8 ரன்கள் சேர்த்தார். இப்படி அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் டோணி கட்டையைப் போட்டு ரன் சேர்க்க முயற்சித்தார். இருப்பினும் 27 பந்துகளைச் சாப்பிட்ட அவரால் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆனால் அதன் பின்னர் வந்த இர்பான் பதான் இந்திய வீரர்களுக்கு சற்றே நிம்மதியைக் கொடுக்கும் வகையில் சற்றே அடித்து ஆடத் தொடங்கினார்.
சிறப்பாக ஆடிய பதான் முன்னணி வீரர்கள் செய்யத் தவறிய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அடித்து ஆடிய அவர் 26 ரன்களைக் குவித்தார். அணியிலேயே அதிகபட்ச ஸ்கோரை எட்டியது பதான் மட்டுமே.
இறுதியில், 17.3 ஓவர்களிலேயே இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இவந்து 74 ரன்களில் சுருண்டது.
ஆஸ்திரேலிய அணித் தரப்பில் நாதன் பிரேக்ன் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களையும், வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20-20 போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்தது.

கிளார்க், கில்கிறைஸ்ட் அபாரம்:
பின்னர் ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. கில்கிறைஸ்ட்டும், ஹாட்ஜும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
கில்கிறைஸ்ட் விளையாடும் கடைசி 20-20 ஓவர் போட்டி என்பதால் அவரது ஆட்டத்தில் படு வேகம் தெரிந்தது. 22 பந்துகளை மட்டுமே சந்தித்த கில்கிறைஸ்ட் படு வேகமாக ஆடி 25 ரன்களைக் குவித்தார்.
அவருடன் இணைந்து விளையாடி மைக்கேல் கிளார்க் படு சிறப்பாக ஆடி 36 பந்துகளில் 37 ரன்களை சேர்த்தார். அவரும் ஹாட்ஜும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். ஹாட்ஜ் 10 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து ஆஸ்திரேலியா 75 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைப் போட்டியிலும், இந்தியாவிலும் நடந்த போட்டிகளில் இந்தியாவிடம் தோற்றதற்கு பழி தீர்த்துக் கொண்டது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவின் வெற்றி 7.3 ஓவர்களிலேயே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா சொதப்பியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.
ஆட்ட நாயகனாக மைக்கேல் கிளார்க் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் தொடங்கவுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இடம் பெறவில்லை. அதேபோல ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பான்டிங் இடம் பெறவில்லை.

Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications