Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெண்டுல்கர் விளையாடும் வரை விளையாடட்டும் - ராஜீவ் சுக்லா

Tendulkar should be allowed to retire on his terms: Shukla
டெல்லி: சச்சின் டெண்டுல்கர் விளையாடும் வரை விளையாடட்டும். அவரது ஓய்வு குறித்து அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓய்வு பெறுவது குறித்து சச்சின்தான் தீர்மானிக்க வேண்டும். யாரும் அவருக்கு ஆலோசனை கூற முடியாது. இந்திய கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட் உலகுக்கும் அவர் மாபெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். எனவே யாரும் போய் அவரிடம் நீங்கள் விளையாட வேண்டாம் என்று கூற முடியாது. சச்சினுக்கே தோன்றினால் மட்டுமே ஓய்வு முடிவை அவர் எடுக்கலாம். அதுவரை அவர் விளையாடட்டும்.

உலகில் சச்சினைப் போல வேறு யாரும் சாதனை படைக்கவில்லை. எனவே அவரை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிளில் இலங்கை வீரர்கள் இடம் பெறக் கூடாது என்று பிசிசிஐ எடுத்த முடிவில் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து எந்த நெருக்கடியும் எங்களுக்கு வரவிலல்லை. இலங்கை வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. வீரர்களின் பாதுகாப்பு முக்கியமானதாகும்.

மேலும் தமிழர்களின் உணர்வுகளையும் நாம் மதித்தாக வேண்டும். அதை புறக்கணிக்க முடியாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு முதல்வர்கள்தான் பொறுப்பு. எனவே முதல்வர்கள் கோரிக்கை விடுக்கும்போது அதை நாங்கள் புறக்கணிக்க முடியாது.

குறுகிய காலத்தில் எங்களால் போட்டிகளையும் மாற்றியமைக்க முடியாது. குறைந்தது 2 மாத காலமாவது தேவைப்படும். எனவே சென்னை போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவும் முடியாது என்றார் சுக்லா.

Story first published: Monday, April 1, 2013, 9:14 [IST]
Other articles published on Apr 1, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+