Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது இறுதிப் போட்டி: ஆஸியை வீழ்த்துமா இந்தியா?

Indian Team
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முத்தரப்புக் கிரிக்கெட் போட்டியின் 2வது இறுதி ஆட்டம் நாளை பிரிஸ்பேன் நகரில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா நாடுகள் பங்கு பெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் துவங்கியது.

இதில் சுற்றுப்போட்டிகளில் விளையாடி முதல் 2 இடத்தை பெற்ற இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 3 இறுதி ஆட்டங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இலங்கை 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று சிட்னியில் முதல் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் சச்சின், ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2வது இறுதிப் போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது.

இந்தியா வெற்றி பெறவில்லை என்றால் 3வது இறுதி போட்டி 7ம் தேதி நடைபெறும். நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றி பெறவேண்டிய கட்டயாத்தில் இருப்பதால் இந்திய வீரர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டினால் தான் வெற்றி வாகை சூட முடியும் என்பதில் ஐயமில்லை.

உலக சாம்பியன் என மார்தட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு நாளைய போட்டி மிகப்பெரிய சவாலாக அமையும்.

இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு போட்டி துவங்குகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+