ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டித் தொடரின் அரை இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த அணிகளான டிரினிடாட்- டொபாகோ மற்றும் கேப் கோப்ராஸ் ஆகியவை இன்று மோதுகின்றன.போட்டித் தொடரின் ஆரம்பத்திலிருந்தே அசத்திக் கொண்டிருக்கிறது டிரினிடாட் அணி. ஒரு போட்டியிலும் அந்த அணி இதுவரை தோல்வியுறவில்லை.வலிமை வாய்ந்த இந்த அணியும், தென் ஆப்பிரிக்காவின் கேப் கோப்ராஸும் இன்று நடைபெறும் அரை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.கேப் கோப்ராஸ் அணி தனது கடைசி சுற்றுப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. இது மட்டுமே அந்த அணிக்கு இந்தத் தொடரில் கிடைத்த ஒரே தோல்வியாகும்.இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால், இன்றைய போட்டியில் வெல்லப் போவது யார், இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #13;