Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னா, பியூஷ் சாவ்லா, பிரவீன் குமார், புவனேஷ் குமார் ... மீது சந்தேகப் பார்வை!

லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, பிரவீன் குமார், புவனேஷ் குமார் உள்ளிட்ட 10 வீரர்கள் மீது ஸ்பாட் பிக்ஸிங் சந்தேகம் வந்துள்ளதாக உ.பி. போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு கூடியுள்ளது.

இந்த பத்து பேருமே உ.பி.யைச் சேர்ந்த வீரர்கள் ஆவர். சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 3 பேர் குறித்து விண்டுசிங் தகவல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

10 பேர் மீது சந்தேகம் வந்துள்ள தகவலை உ.பி. மாநில காவல்துறை டிஜிபி அருண்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது...

சுரேஷ் ரெய்னா மீது சந்தேகம்

சுரேஷ் ரெய்னா மீது சந்தேகம்

சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 10 உ.பி. வீரர்கள் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகம் வந்துள்ளது.

பல கும்பல்கள் சிக்கியுள்ளன

பல கும்பல்கள் சிக்கியுள்ளன

வாரணாசி, மீரட், கான்பூர், காஜியாபாத் போன்ற இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்களை கண்டுபிடித்துள்ளோம். தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இந்த மோசடியில் பலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் தனியாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ரெய்னா- சாவ்லா - பிரவீன் குமார் - ஆர்.பி.சிங்

ரெய்னா- சாவ்லா - பிரவீன் குமார் - ஆர்.பி.சிங்

உ.பி.யைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, இம்தியாஸ் அகமது, அங்கித் சிங் ராஜ்புத், புவனேஷ் குமார், அலி முர்தாசா, எகலாவ்யா திவிவேதி, ருத்ர பிரதாப் சிங், பிரவீன் குமார், பியுஷ் சாவ்லா ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். இப்போதைக்கு எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது.

விரைவில் கைது

விரைவில் கைது

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விரை வில் கைது செய்யப்படுவர். தேவைப்பட்டால் டெல்லி, மும்பை போலீசாருடன் இணைந்து செயல்படுவோம். முன்னாள் முன்னனி வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலரை கண்காணித்து வருகிறோம் என்றார் அவர்.

அருண்குமாரின் இந்த அதிரடித் தகவல் கிரிக்கெட் உலகில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Story first published: Wednesday, May 29, 2013, 9:10 [IST]
Other articles published on May 29, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+