Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசியுடன் மோதல்-விலகுகிறார் வெங்சர்க்கார்

Vengsarkar
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் முன்னாள் கேப்டன் துலீப் வெங்சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். கட்டுரைகள் எழுதுவதற்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். வெங் சர்க்கார் விலகுவதானால் தாரளமாக விலகிக் கொள்ளலாம் என்று கிரிக்கெட் வாரியமும் கூறி விட்டது.

வெங்சர்க்கார் பத்திரிக்கைகளில் கிரிக்கெட் போட்டிகள் குறித்த விமர்சன கட்டுரை எழுதி வந்தார். இதனால் மூத்த வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கட்டுரைகள் எழுத வெங் சர்க்காருக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

ஆரம்பத்தில் இதைக் கடைப்பிடிக்காமல் இருந்து வந்தார் வெங்க்ஸ். ஆனால் வாரியத்தின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கட்டுரை எழுதுவதை நிறுத்தினார். ஆனால் அதற்கு இழப்பீடு தர வேண்டும் என்று வெங்க்ஸ் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் அதை வாரியம் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த வெங் சர்க்கார் நேற்று கொல்கத்தாவில் கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். பின்னர் கொல்கத்தாவிலிருந்து கிளம்பிப் போய் விட்டார். இதனால் அவர் தேர்வுக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியத் தரப்பில் கூறுகையில் வெங் சர்க்கார் விலகுவதானால் தாராளமாக விலகிக் கொள்ளலாம். அவரை வாரியம் தடுக்காது என்று கூறப்பட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+