Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹெராயினை சும்மா டேஸ்ட் மட்டும்தான் பார்த்தோம்: குத்துச் சண்டை வீரர் ராம்சிங்!

Ram Singh with Vijender Singh
அமிர்தசரஸ்: ஹெராயின் போதைப் பொருளை நானும் விஜேந்தர் சிங்கும் பரிசோதித்துத்தான் பார்த்தோம்.. தொடர்ந்தும் பயன்படுத்தியதில்லை என்று குத்துச் சண்டை வீரர் ராம்சிங் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் ரூ130 கோடி ஹெராயின் போதைப் பொருள் சிக்கியதில் முதலில் குண்டு எறிதல் வீரர் அனுப் சிங் சிக்கினார். அவர் சிக்கியதைத் தொடர்ந்து குத்துச் சண்டை வீரர்கள் ராம்சிங் மற்றும் விஜேந்தர் சிங் ஆகியோர் பெயர் அடிபட்டது.

இதில் ராம்சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாமும் விஜேந்தர்சிங்கும் ஹெராயினை பரிசோதித்துப் பார்க்கவே ஒருசில முறை உட்கொண்டோம்.. ஆனால் தொடர்ந்து ஹெராயினை நாங்கள் பயன்படுத்தியது இல்லை என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ராம்சிங் தேசிய விளையாட்டு நிறுவனத்திலிருந்தும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இதேபோல் விஜேந்தர் சிங்குக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. அவரிடம் ஊக்க மருந்து சோதனையும் நடத்தப்பட இருக்கிறது.

Story first published: Sunday, March 10, 2013, 14:58 [IST]
Other articles published on Mar 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+