2வது ஒரு நாள் போட்டிக்கு கோஹ்லி டவுட்தான்

சென்னையில் நேற்று நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியின்போது விராத் கோஹ்லி காயமடைந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான பவுலிங்கினபோது 41வது ஓவரை விராத் கோஹ்லி போட்டார். அப்போது அவர் சறுக்கி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது வலது முழங்காலில் காயமேற்பட்டது.
உடனடியாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மீண்டும் அவர் பந்து வீசவோ, பீல்டிங் செய்யவோ வரவில்லை. இதையடுத்து ஜனவரி 3ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2வது போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பார்க்கப்பட்டுள்ளது. அதில் மூட்டு ஜவ்வு கிழிதல் போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாம். லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. விரைவில் அவர் குணமடைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கோஹ்லி விளையாடாவிட்டால் அவருக்குப் பதில் அஜிங்கியா ரஹானே அணியில் சேர்க்கப்படுவார்.


Click it and Unblock the Notifications