Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராத் கோஹ்லி இந்தியாவின் எத்தனையாவது கேப்டன்னு உங்களுக்குத் தெரியுமா..?

கிங்ஸ்டன்: காயம் காரணமாக டோணி விலக, புதிய கேப்டனாகியுள்ளார் விராத் கோஹ்லி.

மேற்கு இந்தியத் தீவுகளில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கையோடு அங்கு போய் இறங்கியுள்ளது இந்தியா.

முத்தரப்பு தொடரான இதில் இந்தியா தவிர மேற்குஇந்தியத் தீவுகள், இலங்கை ஆகியவையும் பங்கேற்றுள்ளன.

டோணிக்கு தசைப் பிடிப்பு

டோணிக்கு தசைப் பிடிப்பு

போன இடத்தில் டோணிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது பேட்டிங் மட்டும் செய்த அவர் கீப்பிங்குக்கு வரவில்லை.

விலகினார்

விலகினார்

தசைப்பிடிப்பு சரியாக காரணத்தால் தற்போது டோணி தொடரிலிருந்து விலகி விட்டார்.

புது தல கோஹ்லி

புது தல கோஹ்லி

இதையடுத்து துணைக் கேப்டன் கோஹ்லியைப் பிடித்து கேப்டனாக்கி விட்டனர்.

இலங்கையை வெல்வாயா தலைவா...?

இலங்கையை வெல்வாயா தலைவா...?

இன்று நடைபெறும் இலங்கையுடனான போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் வெற்றிக்கு முயல்வார்கள் என நம்பலாம்.

முதல் முறையாக கேப்டன் வேலை

முதல் முறையாக கேப்டன் வேலை

கோஹ்லி துணை கேப்டனாக இருந்து வந்தாலும் இதுவரை இந்தியாவுக்குத் தலைமை தாங்கியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக கேப்டன் வேலை பார்க்கவுள்ளார்.

ஆனா வேலை புதுசில்லை

ஆனா வேலை புதுசில்லை

ஆனாலும் கேப்டன் பணியாற்றுவது கோஹ்லிக்கு புதிததல்ல. 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும், ஐபிஎல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

22வது கேப்டன்

22வது கேப்டன்

இந்திய ஒரு நாள் அணியின் 22வது கேப்டன் கோஹ்லி. இதற்கு முன்பு 21 கேப்டன்களைக் கண்டுள்ளது இந்தியா.

முதல் கேப்டன் வடேகர்

முதல் கேப்டன் வடேகர்

இந்தியாவின் முதல் கேப்டன் அஜீத் வடேகர். ஆனால் வேலை பார்த்தது 2 போட்டிகளில் மட்டுமே..

கவாஸ்கர் 37

கவாஸ்கர் 37

வெங்கட்ராகவன் 2வது கேப்டன். விளையாடியது 7 போட்டிகள். பிஷன் சிங் பேடி 4 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். கவாஸ்கர் 37 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர்.

குண்டப்பா 1

குண்டப்பா 1

குண்டப்பா விஸ்வநாத் ஒரு போட்டிக்கும், கபில் தேவ் 74 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டனர். கிர்மானி 1, மொஹீந்தர் அமர்நாத் 1, ரவி சாஸ்திரி 11 என செயல்பட்டனர்.

அட்டகாச அஸாருதின் 174

அட்டகாச அஸாருதின் 174

திலீப் வெங்சர்க்கார் 18 போட்டிகளுக்கும், ஸ்ரீகாந்த் 13 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்தனர். அஸாருதீன்தான் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர். மொத்தம் 174 போட்டிகளுக்கு அவர்தான் கேப்டன்.

சச்சின் 73

சச்சின் 73

ராசியில்லாத கேப்டனாக பெயரெடுத்த பெருமைக்குரிய கேப்டன் சச்சின்தான். இவர் 73 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்துள்ளார்.

2வது பெஸ்ட் கேப்டன் கங்குலி 146

2வது பெஸ்ட் கேப்டன் கங்குலி 146

அஜய் ஜடேஜா 13 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். அஸாருதீனுக்குப் பிறகு சிறந்த கேப்டனாக அறியப்பட்டவரான கங்குலி 146 போட்டிகளில் கேப்டனாக கலக்கினார்.

டிராவிட் 79

டிராவிட் 79

இந்தியாவின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் 79 போட்டிகளுக்கும், அனில் கும்ப்ளே ஒரு போட்டிக்கும் கேப்டனாக செயல்பட்டனர்.

டோணி 141

டோணி 141

வீரேந்திர ஷேவாக் 12 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அடுத்த கேப்டனான டோணி இதுவரை 141 போட்டிகளுக்குக் கேப்டனாக பணியாற்றியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா 9

சுரேஷ் ரெய்னா 9

சுரேஷ் ரெய்னாவும் கேப்டனாக இருந்தவர்தான். 9 போட்டிகளுக்கு இவர் கேப்டனாக இருந்தார். 21வது கேப்டனான கம்பீர் 6 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

Story first published: Tuesday, July 2, 2013, 15:50 [IST]
Other articles published on Jul 2, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+