பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டனானார் விராத் கோஹ்லி

இதுவரை நியூசிலாந்தின் டேணியல் வெட்டோரி கேப்டனாக இருந்தார். தற்போது அந்த பொறுப்பு, இந்தியாவின் 'வருங்கால' கேப்டன் கோஹ்லியிடம் வந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கோஹ்லி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது சந்தோஷம் தருகிறது. சிறப்பாக உணர்கிறேன். 2008ம் ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான அணி கேப்டனாக இருந்தேன். தற்போது ஐபிஎல் அணியின் கேப்டனாகியுள்ளேன். நல்ல முன்னேற்றம்தான். பெரிய மரியாதை இது. என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணி உரிமையாளர்களுக்கு நன்றி என்றார் கோஹ்லி.
இந்திய அணியின் வருங்கால கேப்டன் என்று வர்ணிக்கப்படும் கோஹ்லிக்கு இந்த ஐபிஎல் தொடரில் தனது முத்திரையைப் பதிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
Story first published: Wednesday, February 20, 2013, 15:56 [IST]
Other articles published on Feb 20, 2013


Click it and Unblock the Notifications