ரஞ்சி போட்டிகளில் அதிக சதம் அடித்து வாசிம் ஜாபர் சாதனை!

இன்று மும்பையில் நடந்த செளராஷ்டிர அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின்போது அவர் ஒரு சதம் போட்டு இந்த சாதனையைப் படைத்தார்.
இது ஜாபருக்கு 32வது ரஞ்சிப் போட்டி சதமாகும். இதுவரை அஜய் சர்மா 31 சதங்கள் போட்டிருந்ததே சாதனையாக இருந்தது. அதை இன்று ஜாபர் முறியடித்தார்.
மேலும் அதிகரன்கள் குவித்த வீரர் வரிசையிலும் ஜாபர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இன்றைய போட்டியுடன் மொத்தம் 16,000 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஒரு ரஞ்சி சாதனையாகும்.
ஜாபருக்கு இது 47வது முதல் தர சதமும் கூட. மேலும் இப்போட்டி அவருக்கு 210வது போட்டியாகும்.
இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் ஜாபர் ஆடியுள்ளார். இருப்பினும் மும்பை அணியின் முதுகெலும்பாக பல காலமாக திகழ்ந்து வருகிறார் ஜாபர்.
இதுவரை ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் சதம் போட்ட சாதனையாளர்கள்
வாசிம் ஜாபர் -32
அஜய் சர்மா - 31
அமோல் மஜூம்தார் -ரிஷிகேஷ் கனித்கர் - தலா 28
அமர்ஜித் கேபி - 27
பிரிஜேஷ் படேல், சுரேந்திர பவே - தலா 26


Click it and Unblock the Notifications