
6-வது ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணி சார்பில் கிரிக்கெட் உபகரணங்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோணி,.இதுவரை நடந்துள்ள 5 ஐ.பி.எல். போட்டியிலும் நாங்கள் ரொம்ப சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். இதற்கு பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கிய காரணம். ஆல்-ரவுண்டர்கள் அதிகம் கொண்ட அணியாக நாங்கள் திகழ்கிறோம்.
அணியின் பேட்டிங் வரிசை நன்றாக அமைந்துள்ளதால் அதனை மாற்றம் செய்து நான் முன் வரிசையில் களம் இறங்க விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் சென்னை அணியில் இருப்பது கூடுதல் பலமாகும். வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களை மட்டும் நாங்கள் நம்பி இருக்கவில்லை. ரவீந்திர ஜடேஜா, பத்ரிநாத் போன்ற வீரர்களும் நன்றாக ஆடி வருகிறார்கள்.அல்பி மோர்கல், பிராவோ, டுபிளிஸ்சிஸ், ல்பனாஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் அணிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்கள். சென்னை ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் ஆடாததால் எங்கள் அணிக்கு பாதிப்பு வராது என்றார் அவர்.