தொடரைப் பறிகொடுத்த இந்தியா- பேட்ஸ்மேன்கள் சரியில்லை- புலம்பும் கேப்டன் டோணி

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணியிடம் தொடர்ச்சியான தோல்விகளை இந்தியா சந்தித்து வருகிறது. ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைப் பறிகொடுத்திருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் டோணி, பாகிஸ்தானை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர். ஆனால் மீண்டும் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.
இந்த தோல்வி அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. கையில் விக்கெட்டை வைத்திருந்தால் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்களை எடுக்க முடியும். இந்த நிலையில் விக்கெட்டை இழக்காமல் விளையாடுவது மிகவும் அவசியம். இன்னிங்சை பாதுகாக்க பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
Story first published: Friday, January 4, 2013, 11:59 [IST]
Other articles published on Jan 4, 2013


Click it and Unblock the Notifications