Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி சட்டையில் பாக்கெட் இருக்கு.. அதுல எத்தனை 'கோப்பை' இருக்குன்னு தெரியுமா...???

பெங்களூர்: கேப்டன் டோணி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஏராளமான முக்கிய கோப்பைகளை வென்று இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த அணியாக திகழ்கிறது.

லேட்டஸ்டாக டோணி தலைமையில் செல்கான் மொபைல் கோப்பையை இந்திய அணி தட்டி வந்தது.

அடுத்தடுத்து டோணி தலைமையில் இந்திய அணி கோப்பைகளை வென்று குவித்து வருவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இனி வெல்வதற்கு எதுவுமில்லை

இனி வெல்வதற்கு எதுவுமில்லை

இனி வெல்ல எந்தக் கோப்பையும் பாக்கி இல்லை என்று கூறும் அளவுக்கு அத்தனை முக்கியக் கோப்பைகளையும் வென்று விட்டார் டோணி.

2007 முதல்

2007 முதல்

2007ம் ஆண்டு டோணி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் அவர் டுவென்டி 20 உலகக் கோப்பைக்குத்தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த முதல் தொடரிலேயே அவர் கோப்பையை வென்று வந்தார்.

இதுவரை 18 கோப்பைகள்

இதுவரை 18 கோப்பைகள்

அதன் பிறகு செல்கான் கோப்பையைச் சேர்த்து மொத்தம் 18 கோப்பைகளை டோணி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.

'கிரேட்' கேப்டன்

'கிரேட்' கேப்டன்

இதன் காரணமாக இதுவரை இருந்த இந்திய கேப்டன்களிலேயே மிகச் சிறந்த கேப்டனாகவும அவர் உருவெடுத்துள்ளார்.

ஐசிசியின் அத்தனை கோப்பைகளும் டோணி வசம்

ஐசிசியின் அத்தனை கோப்பைகளும் டோணி வசம்

ஐசிசி நடத்தும் 3 பெரிய தொடர்களையும் டோணி வென்றுள்ளார். டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை டோணி தலைமையில் இந்தியா வென்றுள்ளது.

சென்னைக்கும் சூப்பர் கேப்டன்

சென்னைக்கும் சூப்பர் கேப்டன்

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் டோணி. ஐபிஎல் கோப்பையை 2 முறையும், சாம்பியன்ஸ் லீக்கை ஒருமுறையும் அவர் வென்றுள்ளார்.

2015 உலகக் கோப்பையையும் வெல்வாரா...??

2015 உலகக் கோப்பையையும் வெல்வாரா...??

அடுத்து 2015ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதையும் வெல்ல டோணி திட்டமிடுவார் என்று தாராளமாக நம்பலாம்.

முதல் கோப்பை 2007ல்

முதல் கோப்பை 2007ல்

டோணி தலைமையில் கிடைத்த முதல் கோப்பை 2007 டி20 உலகக் கோப்பைதான். தென் ஆப்பிரிக்காவிலிருந்து இதை வென்று வந்தார் டோணி.

2008ல் காமன்வெல்த் பேங்க் தொடர்

2008ல் காமன்வெல்த் பேங்க் தொடர்

பின்னர் 208ல் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு காமன்வெல்த் பேங்க் தொடரை டோணி வென்றார்.

2009ல் காம்பேக் கோப்பை

2009ல் காம்பேக் கோப்பை

இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த காம்பேக் கோப்பை முத்தரப்புத் தொடரையும் டோணி தலைமையிலான இந்திய அணி வென்றது.

2010ல் ஆசியக் கோப்பை

2010ல் ஆசியக் கோப்பை

2010ம் ஆண்டு இலங்கையில் நடந்த ஆசியக் கோப்பைத் தொடரையும் டோணி வென்றார்.

2011ல் உலகக் கோப்பை

2011ல் உலகக் கோப்பை

2011ம் ஆண்டு டோணிக்கு முக்கியமான வருடம். அந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று உலகக் கோப்பையை 2வது முறையாக இந்தியா வென்றது.

2013ல் சாம்பியன்ஸ் டிராபி

2013ல் சாம்பியன்ஸ் டிராபி

அடுத்து 2013ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா டோணி தலைமையில் அழகாக வென்று வந்தது. இத்தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்டாக செல்கான் மொபைல்

லேட்டஸ்டாக செல்கான் மொபைல்

கடைசியாக செல்கான் மொபைல் கோப்பையை வென்றுள்ளார் டோணி.

இதுபோக 11

இதுபோக 11

இதுதவிர 11 ஒரு நாள் தொடர்களையும் டோணி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.

Story first published: Tuesday, July 16, 2013, 15:36 [IST]
Other articles published on Jul 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+